இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.3 பாடி மகிழ்வோம்

செந்தமிழா, ஒரு வார்த்தை!

அணுப்பொறியில்

உன் அறிவைத் தீட்டு - நீ

அறிவியலில்

உன்புகழை நீட்டு!

கணிப்பொறியில்

புதுமைகளைக் கூட்டு- உன்

கைத்திறனை

உலகறியக் காட்டு!

- தாராபாரதி