இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.6 கேட்டல் கருத்தறிதல்

விண்வெளிக் கழிவுகள்

விண்வெளியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் கழிவுகள் காணப்படுகின்றன. இவற்றை விண்வெளிக் கழிவுகள் அல்லது விண்வெளிக் குப்பைகள் என்கிறோம். இவை காஸ்மிக் குப்பைகள் என்றும் அறியப்படுகின்றன. விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியன இயற்கை விண்வெளிக் கழிவுகள். விண்ணுக்கு அனுப்பப்பட்டுச் செயலிழந்த செயற்கைக்கோள்கள், அவற்றின் உடைந்த பகுதிகள் ஆகியன செயற்கை விண்வெளிக் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள், விண்வெளியை மாசுபடுத்துகின்றன. விண்வெளி ஆய்வுக்கும் இவை அச்சுறுத்தலாக உள்ளன.

வினாக்கள்

விண்வெளியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் கழிவுகள் காணப்படுகின்றன. இவற்றை விண்வெளிக் கழிவுகள் என்பர்.

விண்வெளிக் குப்பைகள், காஸ்மிக் குப்பைகள்.

விண்வெளிக் கழிவுகளை இயற்கை விண்வெளிக் கழிவுகள், செயற்கை விண்வெளிக் கழிவுகள் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

மனிதர்கள் செயற்கை விண்வெளிக் கழிவுகளை உருவாக்குகிறார்கள்.

விண்வெளிக் கழிவுகள் விண்வெளியை மாசுபடுத்துகின்றன மற்றும் இவை விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.