இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

(குறள்- 34)

- திருக்குறள்

(மாசிலன் – குற்றம் இல்லாதவன்; ஆகுல – ஆரவாரம்)

பொருள் :

மனம் தூய்மையாக இருப்பதே அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம் கொண்டவை.