இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.4 தெரிந்துகொள்வோம்

பல சொல் ஒரு பொருள்

பல சொல் ஒரு பொருள்
சந்திரன், மதி, அம்புலி, திங்கள் நிலா
கதிரவன், பகலவன், வெய்யோன், ஞாயிறு சூரியன்
மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை குழந்தை
ஊண், ஆகாரம், அடிசில், உணவு உணவு
மன்னன், வேந்தன், கோன், புரவலன், இராஜா, கோ அரசன்
வேழம், பகடு, கரி, கைம்மா, களிறு யானை
வையம், பார், புவி, பூமி, ஞாலம், வையகம், நானிலம் உலகம்
ஏரி, குளம், குட்டை, கடல், ஊருணி, தடாகம், கிணறு நீர்நிலை