இகரம்
(இரண்டாம் பருவம்)
அன்பு செய்யின் அயலாரும்
அண்டி நெருங்கும் உறவினராம்
அன்பு நீங்கின் உறவினரும்
அகன்று நிற்கும் அயலாராம்
துன்ப நோயை நீக்கிடுமேல்
துவ்வா விடமும் அமுதாகும்
துன்ப நோயை ஆக்கிடுமேல்
தூய அமுதும் விடமாமே!
- கவிமணி தேசிக விநாயகனார்