இகரம்
(இரண்டாம் பருவம்)
ஒருவன் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருந்தான். அப்பொழுது காட்டில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. இச்சத்ததைக் கேட்டு அவன் பயந்து ஓடினான். சிங்கம் ‘மனிதனே ஏன் பயப்படுகிறாய்? உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்‘ என்றது. ‘மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுதலை செய். நான் உனக்குப் பல உதவிகள் செய்வேன், என்று அது கூறியது. சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பி மனிதன் கூண்டைத் திறந்துவிட்டான். சிறிது நேரத்திற்குள் அது, மனிதன்மேல் பாயத் தயாரானது. இதனையறிந்த மனிதன், ‘நீ செய்வது சரியா? இதுதானா நீ காட்டும் நன்றி?‘ என்றான். அப்பொழுது அவ்வழியாக ஒரு நரி வந்தது. நடந்ததை அறிந்தது. மனிதனுக்கு உதவி செய்ய நினைத்தது. சிங்கத்திடம், நடந்ததை முதலிலிருந்து செய்து காட்டுமாறு கூறியது. அப்பொழுது சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று நரி கூண்டைப் பூட்டியது. நன்றி மறந்த சிங்கம், தன் தவற்றை எண்ணி வருந்தியது.
மனிதன் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருந்தான்.
சிங்கம் மனிதனிடம் என்னைக் கூண்டிலிருந்து விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
நரி
மனிதன் சிங்கத்தின் பேச்சை உண்மையென்று நம்பினான்.
நன்றி மறத்தல் நன்றன்று என்பது இக்கதையின் வாயிலாக உணர்த்தும் நீதி ஆகும்.