இகரம்
(இரண்டாம் பருவம்)
சிவப்பு நிலா நோக்கும் நிகழ்வு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இராயபுரம் N4 கடற்கரை.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை
பதினெண் கீழ்க்கணக்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினெட்டு நூல்கள் கொண்ட தொகுப்புதான் அது. இந்நூலில் மருத்துவப்பெயரைக் கொண்டுள்ள நூல்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
திரிகடுகம் | – | (திரி – மூன்று) சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் உடல்நலம் காக்கும். அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மனநலம் காக்கும் மூன்று அறக்கருத்துகள் இருக்கும். |
சிறுபஞ்சமூலம் | – | (பஞ்சம்-ஐந்து) கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து வேர்கள் உடல்நோயைத் தீர்க்கும். அதுபோல, ஒவ்வொரு பாடலிலும் மனநோயைப் போக்கும் ஐந்து அறக்கருத்துகள் இருக்கும். |
ஏலாதி | – | ஏலம், இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறும் உடலுக்கு நன்மை தரும். அதுபோல, இந்நூலிலுள்ள ஒவ்வொரு பாடலிலும் மனத்திற்கு நன்மை தரும் ஆறு அறக்கருத்துகள் இருக்கும். |