இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

(குறள் 322)

- திருவள்ளுவர்

(பகுத்துண்டு – பகிர்ந்து உண்டு, பல்லுயிர் – பல உயிர், ஓம்புதல் – காப்பாற்றுதல்)

பொருள் :

தம்மிடம் இருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்து, எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும்.