இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.4 தெரிந்து கொள்வோம்

எண்ணுப்பெயர்கள்

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச்சொற்கள் எண்ணுப்பெயர்கள் எனப்படுகின்றன. இப்பாடத்தில் 100 முதல் 1000 வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் படிப்போம்.

1. நூறு - 100
2. இருநூறு - 200
3. முந்நூறு - 300
4. நானூறு - 400
5. ஐந்நூறு - 500
6. அறுநூறு - 600
7. எழுநூறு - 700
8. எண்ணூறு - 800
9. தொள்ளாயிரம் - 900
10. ஆயிரம் - 1000
கூடையில் நூறு மாம்பழங்கள் இருந்தன.
இந்த வாழைத்தாரில் இருநூறு பழங்கள் உள்ளன.
இந்த ஓவியம் முந்நூறு ஆண்டுகள் பழைமையானது.
பாரதியார் கவிதைத் தொகுப்பு நானூறு பக்கங்கள் கொண்டது.
புத்தகக் கண்காட்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
இந்த நிறுவனத்தில் அறுநூறு நபர்கள் பணிபுரிகின்றனர்.
இராமு எழுநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டான்.
அந்தச் சிலையின் உயரம் எண்ணூறு அடி ஆகும்.
போட்டித் தேர்வைத் தொள்ளாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
அரசர் ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கினார்.