இகரம்
(இரண்டாம் பருவம்)
பள்ளி செல்லும் பாப்பா
பாடம் நன்றாய்ப் படிப்பாள்
வெள்ளை ஆடை உடுப்பாள்
விரைந்து நேராய் நடப்பாள்!
நல்ல நல்ல வழக்கம்
நாளுங் கற்று வருவாள்
மெல்ல மெல்லப் பெரிய
மேதை யாகி விடுவாள்!
கற்ற பெண்கள் நாட்டின்
கண்கள் என்று சொல்வார்
சுற்றம் போலே மக்கள்
சூழ்ந்து போற்றி நிற்பார்!
- நாரா நாச்சியப்பன்