இகரம்
(இரண்டாம் பருவம்)
நெகிழிப் (பிளாஸ்டிக்) பயன்பாடு மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் அவை வீதிகளிலும் நிலங்களிலும் நீர்நிலைகளிலும் சேர்ந்து சுற்றுப்புறத்தைப் பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன. பிளாஸ்டிக் ஐரோப்பா அமைப்பின் (Orgganization of Plastics Europe) கூற்றுப்படி 1950 இலிருந்து 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட 9.2 பில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்களில் 7 பில்லியன் டன் கழிவுகளாகப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் 14 மில்லியன் மெட்ரிக் டன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கடலின் தரையில் தங்கியிருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஊட்டச்சத்து இல்லாததாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அவற்றின் அளவைவிட மில்லியன் மடங்கு மாசுகளை உருவாக்குகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களின் உணவு, வாழிடம் ஆகியவை கேள்விக்குள்ளாகின்றன. இவ்வாறு பெருகும் மாசினைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme) என்ற அமைப்பு உலகளாவிய கட்டுப்பாட்டினை உருவாக்கிச் செயல்திட்டங்களை வகுத்து வருகின்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துச் சுற்றுப்புறத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பது மனிதர்களின் முதன்மையான கடமையாகும்.
நெகிழி (பிளாஸ்டிக்)
7 பில்லியன் டன்
14 மில்லியன் மெட்ரிக் டன்
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துச் சுற்றுப்புறத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பது மனிதர்களின் முதன்மையான கடமையாகும்.
நெகிழிப் பயன்பாட்டுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தலாம்.