இகரம்
(இரண்டாம் பருவம்)
(பாடல். 8)
- காரியாசான்
(வனப்பு – அழகு; கண்ணோட்டம் – இரக்கம்; பண் – பாடல்)
கண்ணுக்கு அழகு, இரக்கம் காட்டுதல். காலுக்கு அழகு, மதியாதவரைத் தேடிச் செல்லாமல் இருத்தல். எண்ணுக்கு அழகு இத்தனை என்று சரியாகக் கணக்கிட்டுக் கூறுதல். பாடலுக்கு அழகு, அதனைக் கேட்பவர்கள் மிகவும் நன்று எனப் பாராட்டுதல். அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களைத் துன்புறுத்தாதவன் என்று அனைவராலும் சொல்லப்படுதல்.