இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

26.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

நுண்கதையைப் படித்துப் பொருத்தமான தலைப்பு இடுக.

பசுமை நிறைந்த கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தின் நடுவில் அழகான ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றில் மீன்கள், ஆமைகள், தவளைகள் போன்ற உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தன. ஆற்றிற்கு வரும் கொக்குகளும் மீன்களை உண்டு உயிர் வாழ்ந்துவந்தன. நீர்வளமும் நிலவளமும் அதிகம் இருந்ததால் அங்கு ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டது. அந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் அனைத்தும் அந்த ஆற்றிலேயே திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றில் உள்ளநீர் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாறியது. ஆற்றில் இருந்த உயிரினங்கள் எல்லாம் செத்து மிதந்தன. மீன்களை உண்டு வாழ்ந்த கொக்குகளும் சில நாள்களில் இறந்து போயின. ஆற்றங்கரை ஓரம் இருந்த தாவரங்கள் எல்லாம் கருகிவிட்டன. கொஞ்ச நாளில் ஆறு துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கிராமமே பசுமை இழந்து பாலைவனமாக மாறியது. இறுதியில் அழகான ஆறும் தூய்மை இழந்து மாசடைந்தது.

26.11 செயல்திட்டம்

பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத எதிர்காலம்பற்றி ஓவியம் வரைக.