இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.4 தெரிந்து கொள்வோம்

நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். மொழியில் தெளிவை உணர்த்த நிறுத்தக்குறியீடுகள் பயன்படுகின்றன. இவை, ஒரு தொடரின் பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும். மொழியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நிறுத்தக்குறிகள் துணை நிற்கின்றன.

காற்புள்ளி , ஒற்றை மேற்கோள் '
அரைப்புள்ளி ; இரட்டை மேற்கோள் " "
முக்காற்புள்ளி : வியப்புக்குறி !
முற்றுப்புள்ளி . அடைபுக்குறிகள் ( )
வினாக்குறி ? இடைக்கோடு -

உரைப்பகுதியில் நிறுத்தக்குறிகள்

பாரதியார்

பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் 11-12-1882இல் பிறந்தார். இவர் தந்தையார் சின்னச்சாமி; தாயார் இலக்குமி அம்மையார். பாரதியார் நாடு, மொழி, சமுதாயம் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவரை ‘மகாகவி‘ என்று நாம் போற்றுகிறோம். இவர் தம் 39ஆம் வயதில் (11-9-1921) இயற்கை எய்தினார்.

உரையாடலில் நிறுத்தக்குறிகள்