இகரம்
(இரண்டாம் பருவம்)
(செய்தியைப் படித்தபின், ஆசிரியரும் மாணவர்களும் உரையாடுகின்றனர்.)
ஆசிரியர் | : | செய்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |
கரிகாலன் | : | மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைத்திருப்பார்கள். |
ஆசிரியர் | : | உண்மைதான் கரிகாலன். ஆனால், மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது. அவர்களைக் காப்பாற்றிய ஆசிரியருக்கும் நீச்சல் தெரியாது. |
கண்ணன் | : | அப்படியா? நீச்சல் தெரியாமலேயே இத்தனை பேரைக் காப்பாற்றி இருக்கிறார்களே? |
ஆசிரியர் | : | உயிர் விலைமதிப்பற்றது, கண்ணன்! அதனால்தான் தம்முயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆசிரியர் காப்பாற்றியுள்ளார். |
இலக்கியா | : | அவர், மாணவர்களிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளார் எனத் தெரிகிறது. |
ஆசிரியர் | : | சரியாகச் சொன்னாய், இலக்கியா. இது மனிதநேயப் பண்புகளுள் ஒன்று. |
பொன்னரசி | : | மனிதநேயமா? அப்படி என்றால் என்ன? |
ஆசிரியர் | : | அன்பு. பிற உயிர்களிடத்துக் காட்டும் பரிவு, இரக்கம் என்றும் சொல்லலாம். ஒருவர், சரியான நேரத்தில் மற்றவருக்குச் செய்யும் உதவிதான் இது. |
மாணவர்கள் | : | நாங்களும் மனிதநேயத்தின் தேவையைப் புரிந்துகொண்டோம். இந்தப் பண்பை வளர்த்துக் கொள்வோம். |
ஆசிரியர் | : | மிக்க மகிழ்ச்சி. |
1. | குளம் | - | நீர்நிலை | ||
2. | விபத்து | - | எதிர்பாராத நிகழ்வு | ||
3. | பயணம் | - | ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லுதல் | ||
4. | முயன்றார் | - | முயற்சி செய்தார் | ||
5. | பிழைத்தல் | - | உயிர்தப்புதல் |
கரிகாலன், மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என்றான்.
பேருந்து நீரில் மூழ்கியபோது, ஆசிரியர் சுகந்தி ஜன்னலை உடைத்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்றார்.
இலக்கியா, ஆசிரியர் மாணவர்களிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளார் என்றாள்.
ஆசிரியர் சுகந்தியிடம் வெளியிட்ட பண்பு அன்பு. அதனால்தான் ஆசிரியர் தம்முயிரையும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கிய மாணவர்களைக் காப்பாற்றினார்.
நாகப்பட்டினம், 2009 ஆம் ஆண்டு.