இகரம்
(இரண்டாம் பருவம்)
நல்ல பண்பை வளர்ப்போமே!
நாளும் நன்மை செய்வோமே!
எவர்க்கும் உதவி மகிழ்வோமே!
ஏற்றஇறக்கம் களைவோமே!
பொன்னும் பொருளும் நிலையில்லை
புகழ்ச்சிக்கு மயங்கா மனிதரில்லை
அழியும் செல்வம் பொருட்செல்வம்
அறிந்துகொண்டால் துன்பமில்லை
மன்னுயிர் காத்து வாழ்வோமே!
மனிதநேயம் வளர்ப்போமே!
இரக்கம் என்னும் நற்பண்பை
இன்றும் என்றும் பெறுவோமே!
- பாடநூல் குழுவினர்