இகரம்
(இரண்டாம் பருவம்)
மனிதநேயம் என்றால் இரக்க குணம் என்று சொல்லலாம். ஆனால், அத்தகைய இரக்க குணத்தை இரு நாட்டு அரசர்கள் இடையே நடைபெறும் போரில் வெளிப்படுத்தி உள்ளனர் என்றால் வியப்பாக உள்ளது. ஆம்! நம் தமிழ் இலக்கியத்தில் கம்பராமாயணம் என்ற நூலில் இச்செய்தி “இன்று போய் போர்க்கு நாளை வா என நல்கினான்” என்ற பாடல் (பா. 7271) மூலம் கூறப்பட்டுள்ளது. அதாவது, இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இராணவன் தன் படை வீரர்களையும் படைக்கருவிகளையும் இழந்து நின்றார். இத்தகைய சூழலில் தன் எதிரியிடம் எதிர்த்துப் போர் புரிய எவ்விதப் படைக்கருவிகளும் இல்லை என்ற காரணத்தால் இராமன், இராவணனைக் கொல்ல நினைக்கவில்லை. அதனால், நீ மீண்டும் போர் செய்ய நினைத்தால், “இன்று போய் நாளை வா” என்று கூறி மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறுகிறது அப்பாடல்.
”இன்று போய் போர்க்கு நாளை வா என நல்கினன்“ என்ற செய்தி ஆகும்.
இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் நடைபெற்றது.
படைக்கலமின்றி வெறுமையாக இருந்தவரிடம் இராமன், “இன்று போய் நாளை வா” என்று கூறினார்.
செய்தி கம்பராமாயணத்தில் 7271 ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளது.