இகரம்
(இரண்டாம் பருவம்)
இரத்த தானத்திற்காக முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
50 கிலோவிற்கு மேல் உடல் எடை இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை இருப்பவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இரத்த தானம் செய்ய வேண்டும். எனவே ஒவ்வொருவரும் இரத்த செய்ய முன் வர வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19ஆம் நாள், உலக மனிதநேய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பிறர்க்காகத் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் பாடுபட்ட மனிதநேயப் பண்பாளர்களை நாம் நினைக்கவேண்டும். மழை, வெள்ளம், நிலநடுக்கம் முதலான இயற்கைப் பேரிடர்கள், போர், குண்டுவெடிப்பு போன்ற வன்முறை நிகழ்வுகள் முதலியவற்றால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவுபவர்கள் சில நேரத்தில் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களை நினைவுகூர்வதற்காகவும் பிறருக்கு உதவும் எண்ணத்தைத் தூண்டுவதற்காகவும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.