30.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
கீழ்க்காணும் குறிப்புகள் கொண்டு வரைகதை (Cartoon) உருவாக்குக.
- மாணவர்கள் சாரையோரம் நடந்து செல்லுதல்.
- வயதான பெண் ஒருத்தி, தன் தள்ளுவண்டியில் பழங்களை ஏற்றிக்கொண்டு வருதல்.
- வழியிலுள்ள பள்ளத்தில் வண்டி சாய, அப்பெண் தடுமாறுதல்.
- மாணவர்கள் விரைந்தோடி வருதல்.
- வண்டியைத் தூக்கி நிறுத்துதல்.
- பெண்ணுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்.
30.11 செயல்திட்டம்
மனிதநேயச் செயல்கள் குறித்த படத்தொகுப்பு ஒன்றை உருவாக்கி வருக.