உகரம்
(முதல் பருவம்)
பெயரைக் குறித்துவரும் சொல் பெயர்ச்சொல் (Noun). இப்பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
| 1. பொருட்பெயர் | 4. சினைப்பெயர் |
| 2. இடப்பெயர் | 5. பண்பு/குணப்பெயர் |
| 3. காலப்பெயர் | 6. தொழிற்பெயர் |
இவற்றுள் முதல் மூன்று பெயர்ச்சொற்களைப் பற்றி இப்பாடப் பகுதியில் படிப்போம்.
பொருட்பெயர்
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர்.
கணினி |
வாசன் |
குதிரை |
மரம் |
இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர்.
வீடு |
பள்ளி |
பூங்கா |
சாண்டியாகோ நகரம் |
காலப்பெயர்
காலத்தின் பெயரைக் குறிப்பது காலப்பெயர்.
மழைக்காலம் |
மாலைநேரம் |
கோடைக்காலம் |
ஜனவரி மாதம் |