உகரம்
(முதல் பருவம்)
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். அவர், எப்போதும் காலம் கருதிச் செயல்படுவார். நேரத்தை வீணாக்குவது அவருக்குப் பிடிக்காது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் குறித்த நேரத்துக்கு முன்பே சென்றுவிடுவார்.
ஒரு நாள் வழக்கம்போல நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஆனால், அவருடைய தனிச் செயலாளர் வரவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு செயலாளர் பரபரப்புடன் வந்தார். “ஐயா என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய கடிகாரம் மெதுவாக ஓடுவதால் வருவதற்குச் சிறிது நேரம் ஆகிவிட்டது” என்றார்.
ஜார்ஜ் வாஷிங்டன் தம் செயலாளரைப் பார்த்து, “ஒன்று உங்கள் கடிகாரத்தை மாற்றுங்கள் அல்லது நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும்” என்றார்.
அமெரிக்கா
ஜார்ஜ் வாஷிங்டனுக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது.
நாடாளுமன்றத்திற்கு நேரம் கடந்து வந்தவர் ஜார்ஜ் வாஷிங்டனின் தனிச் செயலாளர். கடிகாரம் மெதுவாக ஓடுவதால் வருவதற்குச் சிறிது நேரம் ஆகிவிட்டது என்று காரணம் கூறினார்.
குடியரசுத் தலைவர், தனிச் செயலாளர் தாமதமாக வந்ததால் அவரைப் பார்த்து, “ஒன்று உங்கள் கடிகாரத்தை மாற்றுங்கள் அல்லது நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும்” என்றார்.