உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

கீழ்க்காணும் செய்தித்தாள் செய்தியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்கள்

தமிழ்

கி.பி. 2004

தமிழ், செம்மொழி என இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தமிழ் இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சுவைச்செய்தி

அறிஞர் அண்ணா தமிழ்மொழியில் புலமை பெற்றவர். அதுபோன்றே ஆங்கிலத்திலும் புலமையுடன் விளங்கினார். ஒரு நிகழ்ச்சியின்போது, அண்ணாவின் புலமையைச் சோதிக்க விரும்பினார் ஒருவர். அவர் அண்ணாவைப் பார்த்து, "Frame a sentence that has three 'because' continuously" என்றார். உடனே அறிஞர் அண்ணா, “No sentence can end with because because, because is a conjunction” என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
அறிஞர் அண்ணா