உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.5 கேட்டல் கருத்தறிதல்

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

முல்லை நன்றாகப் படிப்பாள். அவளுக்குக் கலைகளிலும் ஈடுபாடு இருந்தது. ஆனால், அவள் நினைத்ததுபோல் அனைத்திலும் வெற்றிபெற முடியவில்லை. அதனால், அவள் நம்பிக்கை இழந்து சோர்வாக இருந்தாள். அதை முல்லையின் அம்மா புரிந்துகொண்டார். அவளிடம் ஒரு பழத்தைக் காட்டி, ‘ ‘இந்தப் பழத்திலுள்ள விதைகளுள் எத்தனை விதைகள் மரமாகும்?’ என்று கேட்டார். ‘அனைத்து விதைகளுமே மரமாகுமா என்பது ஐயம்தான் அம்மா ‘ என்றாள் முல்லை.

அம்மா தொடர்ந்தார். ’இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது? முயற்சி செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுதல் கூடாது. முயற்சி என்ற விதைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் உறுதியாக வெற்றி கிடைக்கும்’ என்றார். முல்லை நம்பிக்கையுடன் புன்னகை செய்தாள்.

வினாக்கள்

முல்லை கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்தாள்.

முல்லை நினைத்ததுபோல் அனைத்திலும் வெற்றிபெற முடியவில்லை. அதனால், அவள் நம்பிக்கை இழந்து சோர்வாக இருந்தாள்.

பழம்

முல்லையின் அம்மா, அவளிடம் ஒரு பழத்தைக் காட்டி, ‘இந்தப் பழத்திலுள்ள விதைகளுள் எத்தனை விதைகள் மரமாகும்? என்றாள். அனைத்து விதைகளுமே மரமாகுமா என்பது ஐயம்தான், ‘இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது? முயற்சி செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுதல் கூடாது. முயற்சி என்ற விதைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் உறுதியாக வெற்றி கிடைக்கும்’ என்றாள்.

முல்லை, தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்துகொண்டாள்.