உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.3 தெரிந்துகொள்வோம்

பெயர்ச்சொல் (சினை, குணம்/பண்பு, தொழில்)

முதல் மூன்று வகைப் பெயர்ச்சொற்களை முந்தைய பாடத்தில் படித்தோம். இப்பாடப் பகுதியில் சினை, குணம், தொழில் ஆகிய மூன்று வகைப் பெயர்ச்சொற்களைப் பற்றிப் படிப்போம்.

சினைப்பெயர்

பொருள்களின் உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர்


கை

பூ

கண்

கிளை

குணப்பெயர்

ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் குணப்பெயர்

பாலின் நிறம் வெண்மை
நிலவின் வடிவம் வட்டம்
சாக்லெட்டின் சுவை இனிமை
உயரமான கட்டடம்

தொழில் பெயர்

ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர்


ஆடுதல்

நீந்துதல்

ஓடுதல்

படித்தல்

தகவல் துளி

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஊர் உத்திரமேரூர். இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் ‘குடவோலை முறை’ குறித்த செய்தி உள்ளது. ஊரை மேலாண்மை செய்யும் பொறுப்பாளர்கள் ‘குடவோலை முறை’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதலில், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பின்னர், அவற்றைக் குடத்திலிட்டுக் குலுக்குவார்கள். கூட்டத்திலிருந்து ஒரு சிறுவனை அழைத்து, ஏதேனும் ஓர் ஓலைச்சுவடியை எடுக்கச் செய்வார்கள். இவ்வாறே எத்தனை உறுப்பினர்கள் வேண்டுமோ அத்தனை பேரையும் தேர்ந்தெடுப்பார்கள். இதேபோன்ற செய்தி, சங்க இலக்கியத்திலும் (அகம் : 77) இடம்பெற்றுள்ளது.