உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

(குறள் 385)

- திருவள்ளுவர்

(ஈட்டல் – சேர்த்தல்; காத்தல் – பாதுகாத்தல்; வல்லது – திறமையுள்ளது)

பொருள்

செல்வம் (பொருள்) வரும் வழிகளை உண்டாக்குதல், அந்த வழிகளில் பொருளை தேடிப்பெறுதல், ஈட்டியவற்றைக் காத்தல், காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுதல் என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

பழமொழி

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. கற்பனை
  2. நகர்வலம்
  3. உணவுப்பொருள்
  4. புறநானூறு

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. : கவளம்

யானைக்கு உணவைக் கவளமாக்கித் தருவர்.

  1. கடமை
  2. உழைப்பு
  3. வரி வசூல்