உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.2 படிப்போம்

வீரச் சிறுவன்

கவியரசி ஏழாம் வகுப்பில் படிக்கிறாள். அன்று, வகுப்பாசிரியர் ‘செம்மொழித்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கூறினார். அனைவரும் ஆர்வத்துடன் எழுதினர்.


ஆஹா! என் கிராமம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

நீலக்கடலே! என் கிராமத்தைப் பார்த்தாயா? எத்துணை அழகு! இதற்குத் தீங்கு செய்ய நீ நினைக்கலாமா?

என்ன இது? தடுப்புச் சுவரிலிருந்து தண்ணீர் கசிவதுபோல் இருக்கிறதே? அருகில் சென்று பார்ப்போம்.

யாராவது இருக்கிறீர்களா? ஓடி வாருங்கள். தடுப்புச்சுவரில் துளை ஏற்பட்டு, நீர் கசிகிறது உதவுங்கள்.

நான் என்ன செய்வேன்? அருகில் யாரும் இல்லையே! இப்படியே விட்டுவிட்டால், துளை பெரிதாகிக் கடல்நீர் கிராமத்திற்குள் வந்துவிடுமே!

இதோ, இந்தக் குச்சியைக் கொண்டு துளையை அடைக்க முயற்சி செய்கிறேன். அட, தண்ணீர் கசிவது நிற்கவில்லையே!

என் கைவிரல் கொண்டு துளையை மூடப்பார்க்கிறேன். அட, பரவாயில்லையே! இப்போது தண்ணீர் கசியவில்லை.

ஆ! உடலெல்லாம் நடுங்குகிறதே! குளிர் வாட்டுகிறதே! யாராவது உதவுங்கள். உதவி! உதவி!

அதோ, அங்கே பாருங்கள். சிறுவன் ஒருவன் தடுப்புச்சுவரின் அருகே மயங்கிக் கிடக்கிறான். வாருங்கள், உதவுவோம்.

அடடா! தடுப்புச்சுவரில் துளை ஏற்பட்டுள்ளதே! சிறுவன் தன்னுடைய கைவிரலால் அடைத்துக்கொண்டிருக்கிறான் பாருங்கள். ஓ! இரவு முழுவதும் இப்படியே இருந்திருப்பான் போலும்!

(பீட்டர் மெதுவாகக் கண் திறக்கிறான்) தம்பி, நீ எத்துணை பெரிய உதவி செய்திருக்கிறாய், தெரியுமா? உன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஊர்மக்களைக் காப்பாற்றி இருக்கிறாய்.

(பீட்டரை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்) அம்மா! உங்கள் மகள் மிகச்சிறந்த வீரன். இன்று நம் அனைவருடைய உயிரையும் காப்பாற்றியிருக்கிறான்.

பொருள் அறிவோம்

1. தடுப்புச்சுவர் - பாதுகாப்புச்சுவர்
2. கசிவு - வெளியேற்றம்
3. வாட்டுதல் - வருத்துதல்

விடை காண்போம்

கடல் நீர் கிராமத்திற்கு உள்ளே வராமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

பீட்டர் முதலில் குச்சியைக் கொண்டு தடுப்புச் சுவரில் ஏற்பட்ட துளையை அடைக்க முயற்சி செய்தான். ஆனால் தண்ணீர் கசிவது நிற்கவில்லை. பின்னர் தன் கைவிரல் கொண்டு துளையை அடைத்தான்.

பீட்டரின் செயலைக் கண்டு ஊர் மக்கள், நீ எத்துணை பெரிய உதவி செய்திருக்கிறாய், உன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஊர்மக்களைக் காப்பாற்றியிருக்கிறாய் என்று புகழ்ந்தனர்.