உகரம்
(முதல் பருவம்)
முதியவர் ஒருவர் மரக்கன்று ஒன்றை நட்டு நீர் ஊற்றினார். அதனைக் கண்ட சிறுவன், ‘தாத்தா உங்களுக்கு வயதாகிவிட்டது. இந்த மரம் வளர்ந்து பழம் கொடுக்கும்போது, நீங்கள் அதன் பயனைப் பெற முடியாது. பிறகு ஏன் இதனை வீணாய் நடுகிறீர்கள்?’ என்றான். அதற்கு அம்முதியவர், ‘அதோ பார்! அந்த மரத்தை நான் நடவில்லை. என் முன்னோர் நட்டு வைத்தனர். ஆனால், அதன் பழங்களை நான் சாப்பிடுகிறேன். அதைப் போல் நான் நட்டு வைக்கும் இம்மரக்கன்று, எனக்குப் பிறகு வரும் உன் போன்றவருக்குப் பயன் தருமே’ என்றார். அப்போதுதான் அச்சிறுவனுக்கு முதியவர் செய்யும் செயலின் அருமைபெருமை புரிந்தது.
முதியவர் மரக்கன்று ஒன்றை நட்டு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
சிறுவன், முதியவரிடம் உங்களுக்கு வயதாகிவிட்டது. இந்த மரம் வளர்ந்து பழம் கொடுக்கும்போது, நீங்கள் அதன் பயனைப் பெற முடியாது. பிறகு ஏன் இதனை வீணாய் நடுகிறீர்கள்? என்று கேட்டான்.
கதையில் இடம்பெற்றுள்ள இணைமொழி ‘அருமைபெருமை’.
முதியவர், பலருக்குப் பயன் தரும் என்பதால் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மரம் வளர்ப்பதால் மழைவளம் பெருகும்; நல்ல காற்று கிடைக்கும்.