உகரம்
(முதல் பருவம்)
விளம்பர அறிவிப்பு தமிழ் நண்பர்கள் வழங்கும் தைப்பொங்கல் திருவிழாவைப் பற்றியது.
கயிறு இழுக்கும் போட்டி, ஓவியப்போட்டி, சாக்குப்போட்டி
கயிறு இழுக்கும் போட்டி, உறி அடிக்கும் போட்டி, தமிழ் முறைப்படி உடை அணியும் போட்டி
தைப்பொங்கல் திருவிழா
அறுசுவை உணவு மற்றும் கரும்பு
|
மிகப்பெரிய தீவு. அதில் அடர்ந்த காடு. அதன் நடுவில் மூங்கிலால் அமைந்த வீடு. யானைகள் வரும் ஓசை கேட்டு வீட்டின் தலைவர் வெளியே வந்து பார்க்கின்றார். உடனே தன் குடும்பத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். யானைகள் அவருடைய வீட்டை அடித்து உடைக்கின்றன. அதனைக் கண்ட அவர், மகிழ்ச்சியில் கண்ணீர் விடுகிறார். யானைகள் தம் வீட்டை அடித்து நொறுக்குவதைக் கண்டு ஒருவரால் மகிழ்ச்சி அடைய முடியுமா? அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தவர் ஜாதவ்பயேங். அவர், இந்திய நாட்டின் அசாம் மாநில ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவிலுள்ள மிகப்பெரிய தீவில் ஒரு காட்டை உருவாக்கியவர். யானைகளின் வருகையைத் தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதியவர். அவர், இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுகிறார். |
|