உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.3 தெரிந்துகொள்வோம்

பெயரெச்சம்

முற்றுப்பெறாத வினைச்சொல் எச்சம்/எச்சவினை எனப்படும். எச்சவினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம், காலவகையால் மூவகைப்படும்.

இறந்தகாலம் - சென்ற செழியன்
நிகழ்காலம் - செல்கின்ற செழியன்
எதிர்காலம் - செல்லும் செழியன்
படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்
பறந்த பறவை
பறக்கின்ற பறவை
பறக்கும் பறவை
விளையாடிய சிறுவன்
விளையாடுகின்ற சிறுவன்
விளையாடும் சிறுவன்
எழுதிய மாணவன்
எழுதுகின்ற மாணவன்
எழுதும் மாணவன்

தகவல் துளி

தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள ஊர் வடலூர். இவ்வூரில், மக்களின் பசிப்பிணி நீக்கும் வகையில் மூன்று வேளையும் உணவு தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய 150 ஆண்டிற்குமுன் திரு.அருட்பிரகாச வள்ளலாரால் ஏற்றி வைக்கப்பட்ட இந்த அணையா அடுப்பின் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அணையா அடுப்பு