உகரம்
(முதல் பருவம்)
மயங்கொலிகள், மயக்கம் தரக்கூடிய ஒலிப்பு முறைகளைக் கொண்டவை. அவை ண, ன, ர, ற, ல, ள, ழ. இப்பாடப் பகுதியில் ண, ந, ன ஆகிய மூவெழுத்தின் ஒலிப்புமுறை, பொருள் வேறுபாடு காண்போம்.
|
![]() |
| மல்லிகை மணம் வீசியது. | தாரணி மனம் மகிழ்ந்தாள். |
|
|
| வானவில்லின் வண்ணங்கள் ஏழு | எழிலின் கனவுப் பயணம் |
![]() |
|
| நளினாநடனம் ஆடினாள் | |
|
சோவியத் ரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 – 1910). அவர் ஒருமுறை, தொடர்வண்டி நிலையத்தில் நின்றிருந்தார். ஒரு பெண்மணி அவரைக் கைத்தட்டி அழைத்து, “ஐயா தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது. என் கணவர் உணவு வாங்குவதற்குக் கடைக்குச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள். கூலி தருகிறேன்” என்றார். அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை அழைத்துவந்தார். அதற்கான கூலியையும் பெற்றுக்கொண்டார். சிறிதுநேரம் கழித்து, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது. உடனே, அப்பெண்மணி அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அதற்கு லியோ டால்ஸ்டாய், “அதனால் என்ன? நீங்கள் கூறிய வேலையைக் கூலிக்காகத்தான் செய்தேன். பெற்ற கூலியைத் திருப்பித் தரமாட்டேன்“ என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார். |
|