உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

(குறள் 226)

- திருவள்ளுவர்

(அற்றார் – பொருள் இல்லாதவர்; அழிபசி – மிகுந்தபசி)

பொருள்

வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பழமொழி

அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
  2. மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்.
  3. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. தலைவர்

ஜார்ஜ், தலைவர் பதவியினை ஏற்றுக் கொண்டார்.

  1. திருவிழா
  2. உடற்பயிற்சி
  3. மரியாதை