உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.3 தெரிந்துகொள்வோம்

வினையெச்சம்

வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும். (எச்சம் – முடிவு பெறாத வினைச்சொல்)

ஜானகி எழுதிப் பார்த்தாள்.
சிறுவர்கள் கூடி விளையாடுகின்றனர்.
பிரேமா உணவை விரும்பி உண்பாள்.
அன்பரசன் ஓடி வந்தான்.
இலக்கியா ஆடிக் கொண்டிருந்தாள்.
கண்ணன் படித்து மகிழ்ந்தான்.