உகரம்
(முதல் பருவம்)
கதிரும் சுடரும் நண்பர்கள். இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அவர்களிடம் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. பொறுமையாகப் படித்து, பத்து நிமிடத்தில் விடையளிக்க வேண்டும் என்ற குறிப்பு வினாத்தாளில் இருந்தது.
கதிர், வேகவேகமாக எழுதத் தொடங்கினான். அவனால், பத்து வினாவிற்குமேல் விடையளிக்க முடியவில்லை. சுடர், கடைசி நேரத்தில்தான் எழுதினான். அவனுக்கே வேலையும் கிடைத்தது. கதிர் புரியாமல் சுடரைப் பார்த்தான். சுடர் வினாத்தாளின் 29வது வினாவைக் காண்பித்தான். அதில் ‘30ஆவது வினாவுக்கு மட்டும் விடையளிக்கவும்’ என்றிருந்தது.
கதிர், சுடர்
பொறுமையாகப் படித்து, பத்து நிமிடத்தில் விடையளிக்க வேண்டும் என்ற குறிப்பு வினாத்தாளில் இருந்தது.
கதிர் பத்து வினாக்களுக்கு மட்டும் விடையளித்தான்.
கதிர் வினாத்தாளை முழுமையாகப் படிக்காமல் வேகவேகமாக எழுதியதால் விடையளிக்க முடியவில்லை.
சுடருக்கு வேலை கிடைத்தது. பொறுமையாகப் படித்து, கேள்விக்குப் பதில் எழுதியதால்.