உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

கீழ்க்காணும் செய்தித்தாள் செய்தியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்கள்

பெருங்கடல்களும் பனிப் பிரதேசங்களும் மக்களை பருவநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றுகின்றன.

கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதியில் பனி உறைந்து காணப்படுகிறது.

பனி உறைந்து உருகுவதால் கடல் நீர்மட்டம் உயர்கிறது.

கடல் நீர்மட்டம், ஆண்டுதோறும் 1.8 மி.மீ உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்துப் பெங்கடல்களும் சூடேறிவருகின்றன.

பவளப்பாறைகள் கடலில் உள்ளன.

தகவல் துளி

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம். இது, 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்திலிருந்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க இச்சங்கம் செயல்படுகிறது. இயற்கையை நாம் பாதுகாத்தால்தான், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ஆம் நாள் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு நாளாகக் (World Nature Conservation Day) கடைப்பிடிக்கப்படுகிறது.