உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

(குறள் 1031)

- திருவள்ளுவர்

(ஏர் – உழவுத்தொழில்; உழந்தும் – வருந்துதல்)

பொருள்

உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து சுழன்றாலும் உணவு தரும் உழவுத்தொழிலின் பின் தான் நிற்கின்றது. எனவே, எவ்வளவு வருந்தச் செய்தாலும் உழவுத்தொழிலே சிறந்தது.

பழமொழி

பருவத்தே பயிர் செய்!

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. குறிஞ்சி என்றால் மலைப்பகுதி.
  2. முல்லை என்றால் காட்டுப் பகுதி.
  3. மருதம் என்றால் வயல்பகுதி.
  4. நெய்தல் என்றால் கடல் பகுதி.
  5. பாலை என்றால் வறண்ட பகுதி.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. அருவி

விடுமுறை நாள்களில் அருவிக்கு நீராடச் செல்வேன்.

  1. வெப்பம்
  2. பாலைவனம்
  3. பசுமையான வயல்
  4. கடற்கரை