உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

நீர்இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

(குறள் : 20)

- திருவள்ளுவர்

(இன்று – இல்லாமல்; எனின் – என்றால்)

பொருள்

நீர் இல்லாமல் உலக வாழ்க்கை யாருக்கும் அமையாது. அதுபோல மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாத

பழமொழி

சிறுதுளி பெருவெள்ளம்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. மரம் வளர்ப்போம்.
  2. மழை நீரைச் சேமிப்போம்.
  3. பூமி வெப்பமாவதைத் தடுப்போம்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. நீர் மேலாண்மை

நீரைத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்துவதே நீர் மேலாண்மை ஆகும்.

  1. மழைப்பொழிவு
  2. மழைநீர்ச் சேமிப்பு
  3. நீர்ப் பாசனம்