உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பின்வரும் உரைப்பகுதியைப் படிக்கக் கேட்டு, விடை கூறுக.

போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து

ஓர் ஊரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் வியாபாரத்திற்காக வண்டியில் பொருள்களை ஏற்றிக்கொண்டு காட்டுப்பாதையில் சென்றான். அங்கே முதியவர் ஒருவர் அடிபட்டு கிடந்தார். அவர் வணிகனை அழைத்தார். வணிகன் அம்முதியவரைப் பொருட்படுத்தாமல், முன்னே சென்று கொண்டிருந்தான். பாதையில் திருடர்கள், வணிகனை வழிமறித்து பொருள்களைத் திருடி, அவனையும் காயப்படுத்தி, தரையில் கிடத்திவிட்டு வண்டியுடன் ஓடிவிட்டனர். அப்பொழுது அங்கு வந்த வண்டியினை நிறுத்தி வணிகன் உதவிகேட்டான். அந்த வண்டியில் இவன் உதவி செய்யாமல் விட்டுவந்த முதியவரும் இருந்தார். அவர் வணிகனைப் பார்த்து “தம்பி, இந்தப் பக்கம் திருடர்கள் இருக்கிறார்கள் என்று கூறவே வண்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்டேன். பரவாயில்லை, உயிர் பிழைத்திருக்கிறாய்! வா, உன்னை அழைத்துச்செல்லத்தான் இந்தவழி வந்தோம்” என்றுகூறி வண்டியிலிருந்து கைநீட்டினார். வணிகனும் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்டுவிட்டு அவருடன் மருத்துவமனைக்குச் சென்றான்.

வினாக்கள்

வணிகன் காட்டுப்பாதையில் சென்றான்.

வணிகள் பொருள்களை வியாபரத்திற்காக எடுத்துச் சென்றான்.

வணிகனைத் திருடர்கள் வழிமறித்தார்கள்.

முதியவர், இந்தப் பக்கம் திருடர்கள் இருக்கிறார்கள் என்று கூறவே வண்டியை நிறுத்தச் சொன்னேன். உன்னை அழைத்துச் செல்லத்தான் இந்த வழி வந்தேன் என்று வணிகனிடம் கூறினார்.

பிறருக்கு உதவ வேண்டும்; உரிய நேரத்தில் உதவுவதே சிறப்பு; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க வணிகன் முதியவருக்கு உதவியிருந்தால் பொருள்களை இழக்காமல் திருடர்களிடமிருந்து தப்பித்திருக்கலாம். தன்வினை தன்னைச்சுடும் என்பது போல முதியவருக்கு உதவியிருந்தால் வணிகன் பொருளை இழந்திருக்க மாட்டான்.