உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

(குறள் 396)

- திருவள்ளுவர்

(தொடுதல் – தோண்டுதல்; ஊறும் – உண்டாதல்; கேணி – கிணறு)

பொருள்

மணல் கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் சுரக்கும். அதுபோல், படிக்கப்படிக்கக் கல்வி அறிவு உயரும்.

பழமொழி

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. நூலகம் செல்வோம்; அறிவை வளர்ப்போம்.
  2. புத்தகமே சிறந்த நண்பன்
  3. வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. நூலகம்

என் வீட்டிற்கு அருகில் நூலகம் உள்ளது.

  1. தலைமுறை
  2. ஓலைச்சுவடி
  3. மகிழ்ச்சி