உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.5 கேட்டல் கருத்தறிதல்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஆபிரகாம் லிங்கன் தம் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு நேர்காணல் நடத்தினார். ஆனால், யாரும் தேர்வு செய்யப்படவில்லை. லிங்கனின் நண்பர் காரணம் கேட்டார். அதற்கு லிங்கன், ‘நேர்காணலுக்கு வந்த யாரும் அழகாக இல்லை’ என்றார். நண்பர், ‘முகம் அழகாக இல்லை என்பது, அவர்களது குற்றம் இல்லை அல்லவா?’ என்று கேட்டார்.

அதற்கு லிங்கன், ‘அவர்களது குற்றம்தான். ஏனெனில், நான் அழகு என்று கூறியது, சாதாரண முக அழகை அல்ல. மனிதன் ஒருவனின் முகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மனத்தில் நல்ல எண்ணமும், ஆழ்ந்த தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கண்களில் ஒளி இருக்கும். உதடுகளில் புன்னகை மிளிரும். முகத்தில் பெரும் அமைதி நிலவும். அப்படிப்பட்ட அழகை, வந்தவர் யார் முகத்திலும் நான் பார்க்கவில்லை‘ என்றார். இந்த நிகழ்வு ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்னும் பழமொழியை நினைவுப்படுத்துகிறது.

வினாக்கள்

ஆபிரகாம் லிங்கன்

செயலாளர்

லிங்கன் ’நேர்காணலுக்கு வந்த யாரும் அழகாக இல்லை’ என்பதால் தேர்ந்தெடுக்கவில்லை.

லிங்கன், மனத்தில் நல்ல எண்ணமும், ஆழ்ந்த தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கண்களில் ஒளியும், உதடுகளில் புன்னகையும், முகத்தில் பெரும் அமைதியும் நிலவும். இவை அனைத்தும் ஒன்றிணைந்த முகமே அழகு என்று குறிப்பிடுகிறார்.

“Face is the index of the mind”