உகரம்
(முதல் பருவம்)
பாரதி கலையரங்கம், டைம்ஸ் சதுக்கம்
வானை அளப்போம்…வா!!!
முனைவர் பா. வளர்மதி
முனைவர் த. மலையரசன்
பேராசிரியர் ஜோ. அலெக்ஸ்
|
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா. அவர் ஒரு முறை மஸ்கட் சென்றார். மஸ்கட் மன்னர், அவரை வரவேற்கச் சென்றார். சங்கர் தயாள் சர்மா வண்டியின் அருகே வந்ததும், பின் பக்கக் கதவுகளை மன்னரே திறந்துவிட்டார். அதன்பின் தானே ஓட்டுநராகிக் காரை ஓட்டினார். வளைகுடா நாடுகளில் எவருக்கும் கிடைக்காத சிறப்பு இது. “இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்பான வரவேற்பு?” என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அதற்கு மாமன்னர் சொன்னார், “அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்காக மட்டும், இந்தச் சிறப்பான வரவேற்பு நிகழவில்லை. பூனா பல்கலைக்கழகத்தில் அவரிடம் படித்த மாணவன் நான். சிறந்த ஆசிரியருக்குத் தரவேண்டிய மதிப்பை, மாணவன் என்ற முறையில் அளித்தேன்” என்றார். |
|