உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

(குறள் 398)

- திருவள்ளுவர்

(ஒருமை – ஒரு பிறப்பு; எழுமையும் – ஏழுபிறப்புக்கும்: ஏமாப்பு – பாதுகாப்பு)

பொருள்

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

பழமொழி

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பள்ளிக்குச் செல்வோம்.
  2. கல்வி கற்போம்.
  3. வளமாக வாழ்வோம்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. கல்வி

கவின் கல்வியில் சிறந்து விளங்கினான்.

  1. புத்தகம்
  2. நேர்மை
  3. உலகம்