உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.7 செந்தமிழ்ச்செல்வம்

புறநானூறு

ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;

(பாடல் – 204)

- கழைதின் யானையார்

(ஈ – கொடு ; இரத்தல் – கேட்டல் ; ஈயேன் – கொடுக்கமாட்டேன்)

பொருள்

‘எனக்குக் கொடு’ எனக் கேட்பது இழிவானது ஆகும். அப்படிக் கேட்டபிறகும் ‘நான் கொடுக்கமாட்டேன்’ எனச் சொல்வது மிகவும் இழிவானது ஆகும். ‘எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுவது உயர்ந்ததாகும். அவ்வாறு கூறியபின் ‘எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பது அதனைவிட உயர்ந்ததாகும்.

பழமொழி

உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்கும் மிஞ்சாது

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. தமிழர் வாணிகம் சிறப்புடையது.
  2. பண்டமாற்று மூலம் பொருள் பெற்றனர்.
  3. வாணிகத்திலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. கப்பல்

எனக்குக் கப்பலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

  1. வாணிகம்
  2. ஏற்றுமதி
  3. துறைமுகம்