உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.5 கேட்டல் கருத்தறிதல்

மனத்தை ஒருமுகப்படுத்துவோம்

துறவி ஒருவர் ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது இளைஞர்கள் சிலர், ஆற்றில் முட்டை ஓடுகளை மிதக்கவிட்டனர். பின், அதனைப் பாலத்தின் மேல் நின்று சுட்டனர். சரியாகச் சுடுபவர்களுக்குப் பரிசு என்றனர். ஆனால், எவராலும் சுட முடியவில்லை. அதனைக் கண்டு துறவி புன்னகை செய்தார். இதனை இளைஞர் ஒருவர் கண்டார். அவர், துறவியிடம் ‘சிரிப்பது எளிது சுடுவது கடினம்’ என்றார்.

உடனே துறவி, துப்பாக்கினைப் பெற்றார். அனைத்து முட்டை ஓடுகளையும் குறி தவறாமல் சுட்டார். அதனைக் கண்டு இளைஞர்கள் வியந்தனர். துறவியைப் பார்த்து, ‘குறிபார்த்துச் சுடுவதற்கு ஏதேனும் பயிற்சி பெற்றுள்ளீர்களா?” என்றனர். அதற்குத் துறவி, ‘இல்லை. நான் முதல்முறையாகத் துப்பாக்கியால் சுடுகிறேன். உங்களுக்குப் பரிசுதான் இலக்கு. ஆனால் எனக்கு முட்டை ஓடுகளைச் சரியாகச் சுடுவதுதான் இலக்கு. அதனால்தான் என்னால் சுடமுடிந்தது’ என்றார்.

வினாக்கள்

துறவி

இளைஞர்கள் ஆற்றில் முட்டை ஓடுகளை மிதக்கவிட்டனர். பின், அதனைப் பாலத்தின் மேல் நின்று சுட்டுக் கொண்டிருந்தனர்.

ஓட்டை சரியாக சுட முடியாத இளைஞர்களைக் கண்டு துறவி புன்னகை செய்தார்.

இளைஞர் துறவியிடம் “சிரிப்பது எளிது சுடுவது கடினம்” என்றார்.

துறவிக்கு முட்டை ஓடுகளைச் சரியாகச் சுடுவதுதான் இலக்கு, பரிசு அல்ல, எனவே துறவியால் சரியாக சுட முடிந்தது.