உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.7 செந்தமிழ்ச்செல்வம்

திருமந்திரம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

- பாடல் 724

திருமூலர்

(மெய் – உண்மை; உபாயம் – வழிமுறை; உடம்பு – உடல்)

பொருள்

உடற்பயிற்சிகள் செய்து, உடலைப் பாதுகாத்தல் வேண்டும். அவ்வாறின்றி உடல் அழிந்தால், உடலில் உள்ள உயிரும் அழியும். அத்தகையோர் உறுதியாக, உண்மை ஞானத்தைப் பெறவும் முடியாது. ஆகவே, உடம்பைச் சீராக வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடலை வளர்ப்போம். உடலில் வாழும் உயிரையும் பாதுகாப்போம்.

பழமொழி

பதறாத காரியம் சிதறாது

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. உடற்பயிற்சி உடலுக்கு நல்லது.
  2. தற்காப்புக் கலையைக் கற்றல் வேண்டும்.
  3. மாலையில் விளையாடுதல் வேண்டும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. பயிற்சி

மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெறப் பயிற்சி செய்தல் வேண்டும்.

  1. பள்ளி
  2. பாதுகாப்பு
  3. உடல் வலிமை