உகரம்
(முதல் பருவம்)
சிலையூர் என்னும் சிற்றூரில் சிற்பி ஒருவன் இருந்தான். அவன் செய்யும் சிற்பங்கள் உண்மையான பொருள்களைப் போன்றே காட்சி அளிக்கும். வழக்கம்போல, அன்றும் ஒரு சிற்பத்தை அந்தச் சிற்பி செதுக்கிக் கொண்டிருந்தான். அவன் செதுக்கிய சிற்பம் ஒரு புலியினது உருவமாகும். அந்த உருவத்திற்குக் கண்களை அமைத்தால் போதும், அந்தச் சிற்பம் முழுமை பெற்றுவிடும். ஆகவே அந்தச் சிற்பி, புலி உருவத்திற்குக் கண்களை அமைக்கத் தொடங்கினான். அப்போது, அவ்வழியே ஞானி ஒருவர் வந்தார். அவர். சிற்பி செதுக்கும் உருவத்தைக் கண்டார். உடனே, அந்தச் சிற்பியிடம், “ஐயா அருள்கூர்ந்து அந்தப் புலியின் கண்களைத் திறக்காதீர்கள். அஃது உறங்குவதுபோலச் செதுக்குங்கள்” என்று கூறினார். சிற்பி, காரணம் அறிந்துகொள்ள விரும்பினான். “நீங்கள் செதுக்கும் புலி உருவம் உண்மையான புலியைப்போன்றே உள்ளது. அதனால், அது தூங்குவதுபோல இருக்கட்டுமே” என்றார் ஞானி. ஆனால், அந்தச் சிற்பிக்கு ஞானி கூறிய காரணம் சரியாகப் படவில்லை. தன் கலைத்திறமையைக் கண்டு, ஞானிக்குப் பொறாமை போலும் என்று எண்ணிக்கொண்டான். அதனால், ஞானி கூறியதனைப் பொருட்படுத்தாமல், அந்தச் சிற்பி மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான். ஞானி அவ்விடத்தைவிட்டு அகன்றார். சிற்பி, புலி உருவத்திற்குக் கண்களை அமைத்தான். சிற்பம் உயிர் பெற்றது. அடுத்து என்ன நடந்திருக்கும்? நீங்களே ஊகியுங்கள்.
சிலையூர்
“நீங்கள் செதுக்கும் புலி உருவம் உண்மையான புலியைப் போன்றே உள்ளது. அதனால், அது தூங்குவதுபோல இருக்கட்டுமே” என்ற வரிகள் சிற்பி, சிறந்த கலைத்திறமை கொண்டவன் என்பதை உணர்த்துகின்றன.
புலி உருவம்
ஞானி, சிற்பியிடம் அருள்கூர்ந்து “அந்தப் புலியின் கண்களைத் திறக்காதீர்கள். அல்லது உறங்குவதுபோலச் செதுக்குங்கள்” என்று வேண்டினார்.
சிற்பி, புலி உருவத்திற்குக் கண்களை அமைத்தான். சிற்பம் உயிர் பெற்றது. புலி சிற்பியைக் கொன்றது.