உகரம்
(இரண்டாம் பருவம்)
தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வருவது இடைச்சொல் ஆகும்.
| 1) வேற்றுமை | எடுத்துக்காட்டு | படங்கள் |
| ஐ | குமரன் புத்தகத்தைப் படித்தான். | |
| ஆல் | இது, மரத்தால் செய்த பெட்டி. | |
| கு | கவின் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினான். | |
| 2) விகுதிகள் | எடுத்துக்காட்டு | படங்கள் |
| ஆன் | விமல் பாடல் பாடினான் | |
| ஆள் | குழலி வீணை வாசித்தாள் | |
| ஆர் | அரசர் பரிசு வழங்கினார் | |
| 3) உவம உருபு | எடுத்துக்காட்டு | படங்கள் |
| போல | பொன்னி மயில்போல ஆடினாள். | |
| முயல் மான்போலத் துள்ளியது. | |
|
| வீரன் புலிபோலப் பாய்ந்தான். | |