உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.5 கேட்டல் கருத்தறிதல்

ஓவியம்

மாறனும் கந்தனும் சிறந்த ஓவியர்கள். ஒருநாள் கந்தன் பழங்கள் நிறைந்த கூடையின் ஓவியத்தை வரைந்திருந்தான். மாறனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினான். அந்த ஓவியம், உண்மையான பொருள் போன்றே வரையப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த மாறன், மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டினான். அதில் மனநிறைவு அடையாத கந்தன், அந்தப் படத்தைத் தன் வீட்டுவாசலில் வைத்தான். அதனைப் பார்த்த பறவைகள் உண்மையான பழங்கள் என்று எண்ணி அவற்றை உண்ண வந்தன. ஆனால், படம் வரையப்பட்ட பலகையைக் கொத்திக்கொத்தி ஏமாற்றமடைந்தன. இதனைக் கண்ட கந்தன் கைதட்டி மகிழ்ந்தான்.

மாறன், கந்தனுக்குப் பாடம் புகட்ட எண்ணினான். விருந்திற்கு வருமாறு அவனை அழைத்தான். வீட்டிற்கு வந்த கந்தனைச் சிறிது நேரம் காக்கவைத்தான். பிறகு, உண்ண அழைத்தான். கடும்பசியில் இருந்த கந்தன் மேசையின் மீதிருந்த உணவு வகைகளை உண்ணச் சென்றான். ஆனால், அவற்றைக் கையால் எடுக்கமுடியவில்லை. ஏனெனில், அங்கிருந்த உணவுப்பொருள்கள் அனைத்தும் ஓவியங்கள். அப்போதுதான் கந்தனுக்கு முந்தைய நாள் தான் செய்த தவறு புரிந்தது.

வினாக்கள்

பழங்கள் நிறைந்த கூடையின் ஓவியம்

உண்மையான பொருள் போன்று

ஓவியத்தைப் பார்த்த மாறன், அருமையாக உள்ளது என்று கூறினான்.

பறவைகள், ஓவியத்தைப் பார்த்து உண்மையான பழங்கள் என்றெண்ணி படம் வரையப்பட்ட பலகையைக் கொத்திக் கொத்தி ஏமாற்றம் அடைந்தன.

மாறன், கந்தனுக்குப் பாடம் புகட்ட எண்ணி விருந்திற்கு அழைத்தான்.