உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.4 மொழியோடு விளையாடுவோம்
பயிற்சி - விடுகதைக்கு விடையைப் பொருத்தவும்

வாழைமரம்
நாற்காலி
முட்டை
கைவிரல்
சூரியன்

1. ஒளி கொடுக்கும். ஆனால், விளக்கு இல்லை. சுடும். ஆனால், நெருப்பு இல்லை. பளபளக்கும். ஆனால், தங்கம் இல்லை. அது என்ன?
2. ஐந்து பேருக்கும் ஒரே வீடு. அது என்ன?
3. கால் நான்கு உண்டு. ஆனால் நடக்காது. அது என்ன?
4. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை. வழியும் இல்லை. அது என்ன?
5. மரம் ஏறினால் வழுக்கும்; காய் தின்றால் துவர்க்கும்; பழம் தின்றால் இனிக்கும். அது என்ன?