உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.5 கேட்டல் கருத்தறிதல்

கடைசி இலை

ஜான்சி, சூ இருவரும் தோழிகள். ஜான்சிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவர் சிகிச்சை அளித்தும் நோய் சரியாகவில்லை. இந்நிலையில், ஜான்சி இருந்த அறையின் ஜன்னலுக்கு வெளியே ‘இவி’ கொடி படர்ந்திருந்தது. பனியின் காரணமாக அக்கொடியின் இலைகள் உதிர்ந்தன. இலை உதிர்வது, தன் வாழ்நாள் குறைவதை உணர்த்துவதாக ஜான்சி நினைத்தாள். இதனை அறிந்த சூ, ஜான்சியின் எண்ணத்தை மாற்ற முயன்றாள். அன்று, கடுமையான காற்றுடன் மழை பெய்தது. காலையில் சூ ஜன்னலைத் திறந்து காண்பித்தாள். கொடியின் கடைசி இலை உதிராமல் இருந்தது. அதனைக் கண்ட ஜான்சி புத்துணர்வு பெற்றாள்; இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

ஜான்சிக்கு உடல்நலம் தேறிய பின், சூ ஓர் உண்மையைக் கூறினாள். கொடியில் உதிராமல் இருந்த அந்த இலை, உண்மையானது இல்லை என்றும் அதனை ஓவியர் பெர்மன் வரைந்தார் என்றும் கூறினாள். அதனைக் கேட்ட ஜான்சி வியப்படைந்தாள். தன்மீது அன்புகொண்ட தோழியின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டாள். அவளுடைய செயலைப் பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்தாள்.

வினாக்கள்

சூ

ஜான்சிக்கு

‘இவி’ கொடி

தன் வாழ்நாள் குறைவதை உணர்த்துவதாக ஜான்சி நினைத்தாள்.

கடைசி இலை என்ற கதையின் மூலம் சூ ஜான்சிக்கு எவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டினாள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

சுவைச்செய்தி

ஓரிகாமி (Origami) என்பது காகிதத்தைப் பயன்படுத்தி வடிவங்கள் செய்யும் கலை. இது ஜப்பானியர்களின் பாரம்பரியக் கலையாகும். ‘ஓரி’ என்பது காகிதத்தையும் ‘காமி’ என்பது காகிதத்தை மடிப்பதையும் குறிக்கிறது. இவ்வாறு காகிதத்தில் வடிவம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை தங்களுக்கு அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
ஓரிகாமி