உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

(- (குறள் 26)

- திருவள்ளுவர்

(செயற்கரிய – செய்வதற்கு அரிதான)

பொருள்

அரிய செயல்களைச் செய்பவர் பெரியர்; அவ்வாறு செய்ய முயலாதவர் சிறியர்.

பழமொழி

சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. விருந்தினர்
  2. விழாக்காலம்
  3. பண்பாடு

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அழகு
  2. இசை
  3. விளையாட்டு